ராமர் கோயில் கட்ட அவசரச்சட்டம் வந்தால் ஆதரிப்போம் - முஸ்லிம் வழக்குதாரர் 

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 09:18 am
will-back-ordianance-to-build-ram-temple-muslim-litigant

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று, இதுகுறித்த வழக்குதார்களில் ஒருவரான இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

அயோத்தி இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து ராம ஜென்ம பூமி இயக்கம், முஸ்லிம் சன்னி வஃபு வாரியம் உள்ளிட்டோருக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் எதிர் தரப்பில் இருக்கும் ஒரே வழக்குதாரர் இக்பால் அன்சாரி மட்டுமே. அந்த வகையில், அவரது கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து இக்பால் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து அவசரச்சட்டம் கொண்டு வந்தால்தான் நாடு மகிழ்ச்சி அடையும் என்றால், எனக்கும் அதில் சம்மதம்தான். நாட்டில் இதன் மூலமாக அமைதியும், வளமும் ஏற்படும் என்றால், நானும் அதற்குத் தயார்’’ என்றார்.

கடந்த 1961ம் ஆண்டில் அயோத்தி பிரச்னை தொடங்கியபோது, ஃபைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர், இக்பால் அன்சாரியின் தந்தை ஹசீம் அன்சாரி ஆவார். பல ஆண்டுகளாக, வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்கை நடத்தி வந்த அவர், தனது 96வது வயதில் கடந்த 2016ம் ஆண்டு காலமானார். அவர் பெரும்பாலும், அயோத்தி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக சுமூகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வந்தவர். இந்நிலையில்ல், அவரது மகனும், வழக்குதாரருமான இக்பால் அன்சாரி, ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close