மிலாது நபி பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 11:14 am
pm-modi-and-other-leaders-greetings-on-milad-un-nabi

முஸ்லிம் மத இறைதூதரார் என்று போற்றப்படும் மிலாது நபியின் பிறந்ததினத்தையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  ‘’மிலாது நபியின் பிறந்தநாளில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’நாட்டு மக்கள் அனைவருக்கும் மிலாது நபி பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக சகோதரத்துவம், மனிதம் கடைப்பிடிக்க வேண்டிய கருணை உள்ளிட்டவை குறித்து போதித்தவர் அவர்’’ என்று கூறியுள்ளார்.

பிரதமர்  மோடியின் டுவிட்டர் பதிவில், ‘’மிலாது நபி வாழ்த்துக்கள். நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி உள்ளிட்டவை குறித்த நபியின் போதனைகளை நாம் நினைவுகூர வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close