'சரண கோஷம் போட்ட பக்தர்களிடம் நள்ளிரவில் மூர்க்கத்தனம்'

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 02:22 pm
midnight-swoop-on-devotees-in-sabarimala-cops-brutalize-men-chanting-prayers

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்தமுறை நடந்த போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கையாக  ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகளை கேரள போலீஸார் விதித்தனர். 

கோயில் நடையை இரவு சாத்தி சாவியை ஒப்படைக்க வேண்டும், சன்னிதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், பக்தர்கள் யாரும் இரவு சன்னிதானத்தில் தங்கக்கூடாது என்று போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொதுவாக இரவு நேரங்களில் மலையிலிருந்து கிழே இறங்குவது ஆபத்தானது என்பதால், இரவு சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி காலை நடக்கும் நெய் அபிஷேகத்தில் கலந்து கொண்டு கீழே இறங்குவார்கள். இப்படி இருக்க 19ஆம் தேதி இரவு நள்ளிரவு 2 மணி சபரிமலை சன்னிதானத்தில் இரவு தரிசனம் முடித்து சரண கோஷமிட்ட பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸார் உத்தரவிட்டனர். இதற்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவு நேரத்தில் மலையை விட்டு இறங்க வாய்ப்பில்லை எனவும், காலையில் தான் இறங்க முடியும் எனவும் தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முற்பட்டனர்.

அதாவது, அரவணை பாயசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யும் கவுன்டர்களை இரவு 10 மணிக்கு மூடவும், அன்னதான கூடங்களை 11:00 மணக்குள் மூட வேண்டும் என்றும் கூட உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 70 பக்தர்களை போலீஸார் கைது செய்து ரிசர்வ் போலிஸ் இருக்கும் மனியாரில் வைத்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட ஒரே காரணம், சன்னிதானத்தில் சரணம் பாடியது தான். இருப்பினும் ஹரிஹராச்சனம் பாடி நடை சாற்றப்பட்ட பின் கலைவதாகவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை போலீசார் கேட்கவில்லை. 144 உத்தரவு கோயிலுக்குள்ளும் இருப்பதாக கூறினார். 

இதனால் சபரிமலை சன்னிதானம் பகுதியில் திரண்ட பக்தர்கள் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா முழுவதிலும் இந்த விஷயம் பரவி கடும் போராட்டம் நடந்தது. 

தேவசம் போர்டு தலைவர் பத்மா குமார் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வீடுகளை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினரும் பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராஜேஷ் கூறுகையில், '' வழிபாடு நடத்துவதும் பக்திப் பாடல் பாடுவதும் தான் எங்களது தவறா? நான் காலையில் இங்கு நெய் அபிஷேகம் செய்த பின்னரே இங்கிருந்து புறப்படுவேன். இதற்காக என்னை தனியாக கைது செய்து அடைத்தாலும் பரவாயில்லை. 

நாங்கள் சுவாமி பாடல்களை இந்து கோயில் உள்ளே தான் பாடுகிறோம். தேவாலயம் அல்லது மசூதிகளில் பாடவில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக சந்நிதானத்தில் வைத்து பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடை சாத்தியதும் போவதாக கூறினோம். ஆனால் போலிஸ் வேண்டுமென்றே இதனை பெரிதாக்க நினைத்து கைது நவடிக்கையை மேற்கொண்டனர். எங்களுள் வயது முதிர்ந்த பெண்களும் இருந்தனர். அவர்களும் கைதாக தயார் தான். ஆனால் நெய் அபிஷேகம் முடிந்து நடை சாத்தப்பட்ட வேண்டும்'' என்று அங்கிருந்து ஊடகங்களை நோக்கி ராஜேஷ் கூறினார். 

ஆனால் இருமுடிகளை இழுத்து கீழே தள்ளி போலிஸ் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அதில் ஒரு பக்தர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close