உ.பியில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்க 112 சொகுசு கார்கள் வாங்க முடிவு!

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 03:48 pm
yogi-adityanath-govt-to-buy-112-luxury-vehicles-worth-rs-25-crore-for-kumbh-mela

விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 112 சொகுசு வாகனங்களை வாங்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று அமைச்சரவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, விஐபி பாதுகாப்புக்காக ரூ.25 கோடி செலவில் 112 சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்க ரூ.16.25 கோடி செலவில் போலீசாருக்கு 79 வாகனங்களும், ரூ.6.3 கோடி செலவில் 16 புல்லட் ப்ரூப் மற்றும் ஜாமர்கள் கொண்ட வாகனங்களும் வாங்கப்பட உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close