ரயில் வரும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்த 1 வயது குழந்தை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Nov, 2018 06:02 pm
one-year-old-emerges-unhurt-after-train-passes-over-her-in-mathura-railway-station

உத்தரபிரதேசம் மதுராவில், தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

மதுரா ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தை ஒட்டி அந்த குழந்தை தவறி விழுந்த நிலையில், தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்தது. இதனால், அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயில் சென்ற பிறகு பார்த்தபோது, ரயில் அவளுக்கு மேலாக சென்றது. ஆனால் அந்த குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இந்த காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. 

இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “குழந்தை முதலில் ரயில்வே பிளாட்பாரத்தில் மண்டியிட்டு விளையாடி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிளாட்பாரம் விளிம்பிற்கு சென்று பின் அங்கிருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்தது. உடனே நாங்கள் அலறியடுத்துக் கொண்டு பார்த்தபோது, தண்டவாளத்திற்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் உள்ள பகுதியில் அந்த குழந்தை சிக்கியிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்துள்ளனர். குழந்தை பிழைத்ததை கண்ட பெற்றோரும் அங்கிருந்த பயணிகளும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியடைந்தனர். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close