காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 11:20 am
elections-will-be-held-before-may-in-jammu-and-kashmir-election-commission

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மே மாதத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று டெல்லியில் தெரிவித்தார். இதுதொடர்பாக என்.டி.டி.வி. தொலைக்காட்சி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இந்த மாநிலத்தில் கடந்த 5 மாதங்களாக ஆளுநர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து, புதிய அரசை அமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரின. இதேபோன்று, மக்கள் மாநாட்டுக் கட்சி - பா.ஜ.க. கூட்டணியும் அரசமைக்க உரிமை கோரியது. ஆனால், குதிரை பேரம் நடைபெறும் வாய்ப்புள்ளதாகக் கூறி சட்டப்பேரவையை ஆளுநர் நேற்றிரவு கலைத்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்திடம் என்.டி.டி.வி. செய்தியாளர் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மே மாதத்துக்கு முன்பாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கூட இருக்கலாம். எந்தவொரு மாநிலத்திலும் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை செய்த பிறகு தேர்தல் தேதி குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.


நன்றி: என்.டி.டி.வி. தொலைக்காட்சி


newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close