அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு - இன்றும், நாளையும் மாபெரும் விழாக்களை நடத்தும் ஹிந்து இயக்கங்கள்

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 10:43 am
high-security-in-ayodhya-ahead-of-hindu-groups-functions

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சிவசேனா கட்சி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தனித்தனியாக பிரம்மாண்டமான விழாக்கள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதிலும், ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், அக்கட்சி சார்பில், ராமஜென்மபூமி இடத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படவுள்ளது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவுள்ளார். சரயு நதிக்கரையில் ஆராத்தி எடுக்கும் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் சேர்ப்பதற்காக, புணேவில் உள்ள ஷிவனேரி கோட்டையில் இருந்து பானையில் எடுத்து வரப்படும் மணலை, ராமஜென்மபூமி பூஜாரியிடம் உத்தவ் தாக்கரே ஒப்படைக்கவுள்ளார்.

இதேபோன்று, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாளை மிக பிரம்மாண்டமான விழா அயோத்தியில் நடைபெறவிருக்கிறது. இதில், ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் சாதுக்குள் மற்றும் ஆதரவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது, ராமர் கோயில் கட்டுவதற்கான முயற்சிகளை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close