ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பிரமாண்ட பேரணி!

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 12:49 pm
sangh-parivar-to-hold-3-mega-rallies-to-scale-up-ram-mandir-movement

சங்கபரிவார் இயக்கங்கள் இணைந்து நாக்பூர், பெங்களூரு, அயோத்தி ஆகிய மூன்று இடங்களில் ஸ்ரீ ராமர் கோயில் இயக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடு நிறைவடைந்துள்ளதாக ஆர்எஸ்எஸ் இயக்க அங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட சங்கபரிவார் இயக்கங்கள் இணைந்து நாடெங்கும் நாளை (நவ. 25) தொடங்கி அடுத்த மாதம் டிசம்பர் 25 வரை ஊர்களில் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கான விழிப்புணர்வு பேரணியை நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் டிசம்பர் 9ஆம் தேதி சாதுக்களின் பேரணியும் நடைபெறுகிறது. 

இது குறித்து விஎச்பி அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார், "ராம ஜென்ம பூமி வழக்கு அரசியல் ஆக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். முடிந்தவற்றை விடுத்து தவறை சரி செய்ய காங்கிரசுக்கு நல்ல நேரம் கிடைத்திருக்கிறது. இந்து மக்கள் மீது அவர்களுக்கும் பற்று உள்ளது என்பதை உணரவைக்க வேண்டிய நேரம் இது என்றார். 

ஸ்ரீராமனுக்கு கோவில் கட்டுவதை வலியுறுத்தி நடைபெற உள்ள பேரணியில்  2 லட்சத்துக்கும் அதிகமான இந்து மத ஆர்வலர்கள் பொதுமக்கள் பங்கேற்பார்கள். மத்திய மற்றும் தெற்கு இந்திய மக்களை எளிதில் இணைக்கக் கூடிய இடங்கள் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே நாக்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் பேரணியை நடத்த முடிவு செய்தோம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.  ஜனக்கிரஹா பேரணி என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் கோலாகல நிகழ்ச்சிகளுக்காக அயோத்தி உள்ளிட்ட பேரணி நடக்கும் நகரங்களும் விழாக் கோலம் பூண்டுள்ளன என்று அலோக் குமார் அறிவித்தார். முன்னதாக இதன் ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர் பய்யாஜி ஜோஷி பார்வையிட்டார். சிவ சேனா தலைவர் உத்தாவ் தாக்கரேயும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நேரில் விசாரித்தார். 

சிவ சேனா பேரணிக்கு உ.பி அரசு தடை

இதனிடையே அயோத்தியில் சிவசேனா சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் பேரணிக்கு உத்தரபிரதேச மாநில அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து விஎச்பி அமைப்பின் அங்க உறுப்பினர் கூறுகையில், சிவ சேனாவின் பேரணி என்பது சங்கபரிவார் நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டு உள்ளது. அதனால் அவர்கள் அயோத்தி விவகாரத்தில் அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார். 

'அயோத்தி வழக்கை விரைந்து முடித்திடுக' - ஜனக்கிரஹா பேரணிக்கு தயாராகும் ஆர்எஸ்எஸ் கோரிக்கை

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close