கர்நாடக பேருந்து விபத்தில் 25 பேர் பலி; பிரதமர் இரங்கல்

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 04:38 pm
pm-narendra-modi-condemned-for-karnataka-accident

கர்நாடகா மாண்ட்யா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்ட்யாமாவட்ட த்தில் உள்ள கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கால்வாயில் விழுந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகா மாண்ட்யாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த  இரங்கல்கள். இறந்தவர்களின் குடும்பங்கள் மீதே எனது எண்ணங்கள் அனைத்தும் உள்ளது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையை கொடுக்க வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close