அரசு சலுகைகளை உதறித் தள்ளும் வாஜ்பாயின் குடும்பம்!

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 04:29 pm
atal-s-kin-sets-an-example-denies-to-take-government-provisions

தனக்கும் தனது குடும்பத்திற்கும் அரசின் சலுகைகள் எதுவும் வேண்டாம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மகள் நமீதா பட்டாச்சார்யா கூறியுள்ளார். இதனை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி உயிரிழந்தார். இவரது வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா, தனது கணவர் மற்றும் மகளுடன் வாஜ்பாய் வசித்து வந்த டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். 

வழக்கமாக முன்னாள் பிரதமரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். அதன்படி, வாஜ்பாயின் குடும்பத்திற்கும் அரசு பல்வேறு வசதிகளையும், சலுகைகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. 

ஆனால், வாஜ்பாயின் குடும்பம் இந்த சலுகைகளை ஏற்க மறுத்துள்ளது. தற்போது வசித்து வரும் பங்களாவில் இருந்து தங்களது சொந்த வீட்டிற்கு மாற இருப்பதாகவும், அரசின் சலுகைகள் எதுவும் தங்களது குடும்பத்திற்கு வேண்டாம் எனவும் நமீதா தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் வேண்டாம் என்று கூறிய அவர், இது தொடர்பாக ஒரு கடிதத்தையும் பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில், 'எங்களது சொந்த பணத்திலே எங்களால் வாழ முடியும். அரசிற்கு பாரமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

வாஜ்பாயின் குடும்பம் எடுத்த இந்த முடிவை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close