அடுத்த 6 மாதத்திற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசுக்கு நிதி தேவையில்லை- அருண் ஜெட்லி

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Nov, 2018 07:43 pm
government-does-not-need-central-bank-funds-yet-arun-jaitley

அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திலும், தன்னாட்சி அதிகாரத்திலும் மத்திய பாஜக அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, அதனை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மோடி முயற்சி செய்து வருவதாகவும், இதனால்தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக உர்ஜித் படேல் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் மத்திய அரசு, நிதி பற்றாக்குறை காரணமாக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் முன்வைத்திருந்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்திருந்தது. மேலும் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டமும் நடத்தி, ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியானது 

இந்நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு மதிக்கிறது. அதே சமயம், பணப்புழக்கம் மற்றும் கடன்வசதி இன்றி சில துறைகள் பாதிக்கப்படும்போது அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டியிருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் மூலமே அந்த பிரச்னைகளை தீர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close