கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம்: டெல்லி புறப்படுகிறார் ரஜினி

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 10:40 am
kannada-actor-turned-politician-ambareesh-dies-at-66

பிரபல கன்னட நடிகர் மற்றும் அரசியல்வாதி அம்பரீஷ்-க்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று மரணடைந்தார். 

உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார். அவருக்கு வயது 66. இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார்.

கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். நாகரஹாவு, பங்காரத கள்ள, சீதையல்ல சாவித்ரி, மகதேஸ்வர பூஜாபல, சுபமங்களா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ். ப்ரியா படத்தில் ஸ்ரீதேவியின் காதலராக நடித்திருப்பார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

 

 

ஆனால் அம்பரீஷின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும். உடல்நலக்குறைவால் நடிகர் அம்பரீஷ் நேற்று இரவு மரணம் அடைந்தார். 

அம்பரீஷ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், "நல்ல மனிதர், என்னுடைய நண்பர். இன்று உன்னை இழந்துவிட்டேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் அம்பரீஷ்க்கு அஞ்சலி செலுத்த ரஜினி இன்று பெங்களூரு செல்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close