6 நாட்கள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் குடியரசுத் தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 09:54 am
president-ram-nath-kovind-arrives-back-in-delhi

வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லி திரும்பினார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் அரசுமுறைப்பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்றார். முதலில் வியட்நாம் சென்ற அவர் அந்நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசியதுடன், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார். 

தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்ற அவரை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். சிட்னியில் உள்ள அன்சாக் போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா வாழ் இந்திய சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய வம்சாவளியினருக்கு மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் மோரிசான்-யை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்துள்ளார். 

இதையடுத்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று காலை டெல்லி திரும்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close