மன் கி பாத் நிகழ்ச்சியில் ஒலிப்பது மக்களின் குரலே: என்னுடைய அரசியல் கருத்துகள் அல்ல: பிரதமர் உரை

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 02:52 pm

pm-narendra-modi-s-50th-mann-ki-baat

மன் கி பாத் நிகழ்ச்சியில் ஒலிப்பது மக்களின் குரலே என்றும் இதில் அரசியல் இருக்கக்கூடாது என்று முதல் ஒலிபரப்பின்போது முடிவு செய்து, அதன்படி நடந்து வருகிறேன் என்று இன்று ஒலிபரப்பாகிய அந்த நிகழ்ச்சியின் 50வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 50வது மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அனைவரும் இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கான யோசனை எப்படி தோன்றியது என்று என்னிடம் கேட்டனர். இப்போது அதனை கூறுகிறேன். 1998ம் ஆண்டு நான் இமாச்சல் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தேன். அப்போது கடுமையான குளிரில் மாலை வேளையில் நான் ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டேன். அப்போது ஒரு கடையில் டீக்குடிக்க நின்றேன். அந்த கடையில் ஒருவர் மட்டும் தான் இருந்தார். நான் உள்ளே சென்றதும் எனக்கு லட்டு கொடுத்து சாப்பிடும் படி கூறினார். நான் என்ன  விசேஷம் என்று கேட்டேன். அவர் ரேடியோவை ஆன் செய்தார். 

அன்று இந்தியா முதல் முறையாக அணு ஆயுத சோதனையை செய்திருந்தது. அந்த செய்தியை ரேடியோவில் கூறிக்கொண்டு இருந்தனர். அப்போது தான் நாட்டின் ஒரு சின்ன பகுதியில் இருக்கும் ஒருவர் தனது அன்றாட வேலைகளை பார்த்துக்கொண்டே எப்படி அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்வதற்கு ரேடியோ உதவுகிறது என்பதை அறிந்தேன். 

மன் கி பாத் தொடங்கிய போது, இது அரசியலின் ஒரு அங்கமாக இருக்க கூடாது என்று முடிவு செய்தேன். இதில் அரசின் செயல்பாடுகள் குறித்து எந்த பாராட்டோ, அல்லது என் பெயரோ கூட வர கூடாது. மன் கி பாத் மக்களுக்கானது என்பதில் தெளிவாக இருந்தேன். 

மோடி வருவார் போவார்... ஆனால் நாட்டின் கலாச்சாரம் நிலையானது. மன் கி பாத் நிகழ்ச்சியை ஒவ்வொரு முறையும் ஒலிப்பரப்பும் ஊடகங்களுக்கு நன்றி. 

பெரிதாக கனவு காணுங்கள். இது புதிய இந்தியா. இளைஞர்கள் ஒரே நேரத்தில் பலவற்றை செய்ய வேண்டும் என்று நினைப்பதாக பலர் கூறுகின்றனர். அதில் என்ன தவறு. அவர்கள் அதில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். விரும்புவதை செய்யட்டும் என்று நான் கூறுவேன். 

தூய்மை, சாலை பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத இந்தியா, மகளுடன் செல்பி என விழிப்புணர்வு பல வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறோம். நான் ஒவ்வொரு முறையும் இளைஞர்களின் சாதனையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன். நான் இளைஞர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்க விரும்புகிறேன்" என்றார். 

மேலும் அவர் உரையில், "நாளை அரசியல் அமைப்பு தினம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களை நினைவுகூற வேண்டிய நாள். அவர்கள் 3 ஆண்டுகளில் இந்திய சட்ட அமைப்பை உருவாக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 

ஒவ்வொருவரின் உரிமையும், கடமையும் நமது சட்ட அமைப்பில் மிக தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும். நாம் மற்றவரின் உரிமையை மதித்தால் நமக்கான உரிமை காப்பாற்றப்படும். சட்டத்தை பற்றி பேசும் போது ஒருவரை மறந்துவிட முடியாது. அவர் தான் அம்பேத்கர். அவரது நினைவு நாள் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இல்லை என்று அவர் கூறுவார். நாடு தான் முக்கியம் என்பது தான் அவரிது கொள்கை" என்று பேசினார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.