முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாஃபர் ஷெரிப் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 06:00 pm
former-railway-minister-jaffer-sheriff-died

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான ஜாஃபர் ஷெரிப் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாஃபர் ஷெரிப் (85), முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது, 1991 - 1995ல் மத்திய ரயில்வே அமைச்சராக பணி புரிந்தார். இவர், கடந்த ஒரு வார காலமாக உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஜாஃபர் ஷெரிப் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜாஃபர் ஷெரிப் ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான், ரயில் பாதைகள் அகலப்பாதையாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close