ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தை விற்க மத்திய அரசு தீவிரம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Nov, 2018 09:22 pm
govt-plans-to-wrap-up-sale-of-air-india-subsidiary-aiatsl-by-march

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான வான் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் எனப்படும் AIATSL-ஐ  மார்ச் மாதத்திற்குள் விற்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. 

ஏர் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாயில் கடனில் சிக்கித்தவித்துவருகிறது. எனவே ஏர் இந்தியா நிறுவனத்துக்காக மொத்தம் 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ள மத்திய அரசு தற்போது வரை 15,200 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இதற்காக ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துக்களை மத்திய அரசு ஏலத்தில் விற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமானங்களை தரையில் கையாளும் சேவைகள் வழங்கும் ஏர் இந்தியாவின் வான் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் எனப்படும் AIATSL-ஐ மார்ச் மாதத்திற்குள் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பயணிகள் சேவை, பாதுகாப்பு மற்றும் சரக்கு மேலாண்மையை ஆகியவற்றை இந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடதக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close