மும்பை தாக்குதல் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.35 கோடி பரிசு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 02:28 pm
us-announces-5-million-reward-for-information-on-26-11

கடந்த 2008ல் மும்பையில்  தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்தோ, அவர்களது சதித்திட்டத்திற்கு உதவியவர்கள் குறித்தோ தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கடல் வழியாக ஊடுருவி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மும்பையின் பல்வேறு இடங்களில் 3 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும், தீவிரவாதிகளை அனுப்பிய உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்து . பேசியதாக கூறப்படுகிறது. மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என இருவரும் முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு காரணமான இருக்கும் குறிப்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடையை தீவிரமாகச் செயல்படுத்த அனைத்து நாடுகளுக்கும் கோரியுள்ளோம். குறிப்பாக பாகிஸ்தானுக்கு வலியுறுத்துகிறோம். சர்வதேச நாடுகளுடன் இணைந்து, மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து நீதிமுன் நிறுத்த அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும்.

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள்.  மொத்தமாக 166 பேர் கொல்லப்பட்டனர். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த்துக்கொள்கிறோம். 

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்தோ அல்லது சதித்திட்டம் தீட்டியவர்கள் குறித்தோ அல்லது உதவியவர்கள் குறித்தோ தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.35 கோடி) பரிசாக அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close