அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 05:10 pm
vhp-raises-ram-temple-pitch-sena-warns-bjp-not-to-take-hindu-sentiments-for-granted

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 

அயோத்தியில் ராமர் சிலை நிறுவுவதில் உத்தரபிரதேச அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. உலகிலேயே உயர்ந்த படேல் சிலையை விட உயரமாக ராமர் சிலை அமைக்கப்படும் எனவும், இதற்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ராம ஜென்ம பூமியை முஸ்லிம்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராமர் பிறந்த  இடம்..எனவே அந்த இடம் முழுவதுமே இந்துக்களுக்கு தான் என போர்க்கொடி தூக்கி வருகின்றன. 

இந்நிலையில் நேற்று அயோத்தியில்  வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய  தர்ம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய துணை தலைவர் சம்பத் ராய் கூறுகையில், ’நீதிமன்றத்தில் கூறியபடி, சர்ச்சைகுரிய அந்த இடத்தை 3 பாகமாக பிரிக்க முடியாது. முழு நிலமும் ராமர் கோவில் கட்டுவதற்கு தான்பயன்படுத்தப்பட வேண்டும்" என்றார். 

மேலும், கும்பமேளாவின்போது, ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும், இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து நடைபெற்ற பேரணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 2 லட்சம் பேர் பங்கேற்றனர். எங்கு பார்த்தாலும், காவி நிற கொடிகளுடன் தொண்டர்கள் காணப்பட்டனர். அயோத்தியில் 'ராமர் கோவில் கட்டியே தீருவோம்' என, அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும், இந்து அமைப்புகள் நடத்திய அந்த மாநாட்டில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்பிரதமர் மோடியை முழுமையாக நம்பி இருப்பதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டை முன்னிட்டு, அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும், 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி வெளியான பிறகு ராமர் கோவில் தொடர்பான இறுதி முடிவை பிரதமர் மோடி எடுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close