30ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 08:51 am
144-to-stay-till-friday-at-sabarimala

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கேரளாவில் பதட்டமான சூழல் தொடரும் நிலையில் சபரிமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை தடை உத்தரவை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து  இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை கோயில் சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை கேரள அரசு பிறப்பித்தது. கடந்த 11 நாட்களாக நீடித்து வரும் இந்த உத்தரவு, நேற்று நள்ளிரவோடு நிறைவு பெறுவதாக இருந்தது.

இந்நிலையில் இந்த 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்கள் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் நூஹ் உத்தரவிட்டுள்ளார்.சபரிமலையில் தற்போது பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close