புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 10:41 am
sunil-arora-appointed-new-chief-election-commissioner

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை, குடியரசு தலைவர்  நியமித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோராவை புதிய தலைமை தேர்தல் ஆணையராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் தலைவராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 2005 முதல் 2008ம் ஆண்டு வரை வசுந்தரா ராஜேவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு பெற்றதையடுத்து, தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார். இவர் வரும் 2ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close