காவிமயமாக்கப்பட்டு வருகிறதா சீரடி சாய்பாபா கோவில்....?

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Nov, 2018 03:20 pm
saibaba-sansthan-trust-removes-controversial-signboards-after-protests

மகாராஷ்டிரத்தின் சீரடி சாய்பாபா கோவில் காவிமயமாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு காரணம் கோயில் அறக்கட்டளைகளிடமும், வழிபாட்டு முறைகளிலும் ஏற்பட்ட மாறுபாடுகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

பொதுவாக மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா சமாதிக்கு முஸ்லீம்களும், இந்துகளும் வருவது வழக்கம். இந்நிலையில் சீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையில் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றதில் இருந்து வழிபாட்டு நடைமுறைகள் இந்து மதத்தைப் போன்று மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி கொடிமரத்தில் சாய் என எழுதப்பட்டிருந்த எழுத்து நீக்கப்பட்டு ஓம் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு மேலும் சந்தேகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, உடனே பெயர் பலகைகளின் வண்ணம் மற்றும் எழுத்துகளை மாற்றக்கக்கூறி போராட்டம் நடந்தது. மேலும் இது தொடர்பாக உள்ளூரில் உள்ள முஸ்லிம்கள் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலரிடம் ஒரு புகார் அளித்துள்ளனர். அவர் அளித்த புகாரில் கோவிலின் வண்ணம், பெயர்ப்பலகைகளின் வண்ணம் உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த சர்ச்சையையடுத்து சீரடி சாய்பாபா கோவிலில் பெயர்ப்பலகையை மாற்றியதைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பெயர்பலகை முன்பு இருந்ததைப் போல் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் கோவில் காவிமயமாக்கப்படுவதாக கூறி அப்பகுதி முஸ்லீம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருவழியாக சபரிமலை சர்ச்சை அமைதியாக முடிந்துவருகிறது என நினைத்தால் அடுத்த பிரச்னை தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. 

Newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close