1984 கலவரம்: உயிரோடு இருக்கும் குற்றவாளிகள் சரணடைய உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 03:34 pm
delhi-high-court-upholds-jail-terms-of-88-rioters

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 88 பேருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையை உறுதி செய்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் கொல்லப்பட்டார். அதற்கு பிறகு இரு தினங்களுக்கு சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன. 

இந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 வீடுகள் எரிக்கப்பட்டன. இதில் மொத்தமாக 88 பேர் குற்றவாளிகள் என டெல்லி கீழமை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதில்  தற்போது 47 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தும் அவர்கள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close