தெலங்கானாவில் விமான விபத்து: உயிர் தப்பினார் விமானி!

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 04:31 pm
iaf-s-kiran-aircraft-crash-lands-in-telangana-trainee-pilot-escapes-with-injuries

தெலங்கானா மாநிலத்தில் விமானப் படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த விமானி  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹக்கிம்பேட் விமானப்படை தளத்திலிருந்து,புதன்கிழமை காலை வழக்கம்போல் பயிற்சி விமானம் புறப்பட்டது. புவனகிரி மாவட்டம், பகுபிட்டா என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close