பி.எஸ்.எல்.வி. - சி43  இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

  சுஜாதா   | Last Modified : 29 Nov, 2018 05:54 am
isro-pslv-c43-hysis-mission-to-launch-today

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.-சி43 செலுத்து வாகனம் எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். என்ற செயற்கைக்கோளை 29.11.2018 இன்று விண்ணில் செலுத்த பட உள்ளது. இந்த செயற்கைக்கோளுடன் 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட உள்ளன.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி43 செலுத்தப்பட உள்ளது. 

எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். செயற்கைக்கோளின் எடை 380 கிலோ கிராம் ஆகும். சூரிய சுற்று வட்டப் பாதையில் இது செலுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் இயக்கக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

விவசாயம், வனவளம், புவிசூழல், கடற்கரையோர பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் போன்றவற்றின் தன்மைகள் குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பும். இதில் உள்ள அதிநவீன படம் பிடிக்கும் கருவி இடங்களை ஊடுருவி பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும் சிறப்புத்தன்மை கொண்டது.

இந்த செயற்கைக்கோள் வியாழன் இன்று (29.11.2018) காலை மணி 9.57-க்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோளுடன் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. இவை தவிர ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து தலா 1 செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி.-சி43 நான்கு நிலைகளில் இந்த செயற்கைக்கோள்களைப் பிரித்து விண்ணில் செலுத்தும். இந்த ஆண்டில் மட்டும் 6-வது முறையாக விண்ணில் செயற்கைக்கோள் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close