காஷ்மீரை இந்திய வரைபடத்தில் இல்லாமல் செய்த சிபிஎம்; ஒருங்கிணைத்த சீனா!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 02:00 pm
cpm-displays-indian-map-sans-jammu-kashmir-while-chinese-communist-tv-channel-shows-entire-j-k-as-part-of-india

இந்தியாவை ஒற்றுமையான பாரதமாக காணாமல், ஒருங்கிணைக்கப்பட்ட தனித்தனி மாநிலங்களாக தான் கம்யூனிஸ்ட் கட்சி பாவிக்கிறது என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

1964ல் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஎம் என பிளவுண்டது. ஆனால், இவை இரண்டின் மனநிலையும் ஒன்றாக தான் உள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் சீனாவோ இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இணைத்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறது. 

தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் நாட்டை பிரித்தாளும் வகையிலான செயலில் ஈடுபட்டுள்ளது. அதாவது, சிபிஎம் கட்சி கேரளாவில் மக்கள் இயக்க பேரணியை நடத்துகிறது. பேரணியில் சபரிமலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை பரப்ப உத்தேசித்துள்ளது. இதற்காக உயர் நீதிமன்ற விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய பதாகைகளை வைத்துள்ளது. 

அப்படி, பாலக்காட்டில் அந்தக் கட்சி வைத்த பதாகை ஒன்றில் இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தில், காஷ்மீரை முழுவதுமாக நீக்கி இந்தியாவின் வெளிமாநிலமாக இடம்பெற செய்துள்ளது அதனை பார்த்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதற்காக பாஜக அக்கட்சி மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது. 

சீன அரசு செய்தி சேனலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, முழு காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகளாக காட்டும் வகையில் இந்திய தேசிய வரைப்படம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மூன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள், இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த சிஜிடிஎன் சேனல், இந்த தாக்குதல் குறித்து நவம்பர் 26ம் செய்தி வெளியிட்டது. அப்போது காட்டப்பட்ட பாகிஸ்தான் வரைபடத்தில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழு காஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது. 

இது தவறுதலாக ஏற்பட்டதா அல்லது பாகிஸ்தான் உடன் உள்ள சமீப முரண்பாட்டால் எப்படி செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் சீனா மீது அதிருப்தியில் உள்ளது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close