'மனிதத்தின் வெளிப்பாடு' -கேரள முதல்வருக்கு கமல் ஹாசன் பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 05:41 pm
kamal-haasan-thanks-to-kerala-cm-pinarayi-vijayan

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு ரூ. 10 கோடி நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதுவரை 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதியும், 14 லாரிகளில் நிவாரணப் பொருட்களும் அனுப்பிவைப்பதாகவும், 72 மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிக்காக வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தனது கோரிக்கையினை ஏற்று உதவிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு  கேரள முதல்வர் அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close