25 வயதிற்கு மேற்பட்டோரும் நீட் தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 02:01 pm
students-aged-25-and-above-can-take-undergraduate-medical-entrance-test-2019

25 வயதிற்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட்தேர்வு எழுதலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி கேரள மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 25 வயதிற்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.  மேலும்,நீட் தேர்வுக்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன், வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

முன்னதாக. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close