மராட்டியர்களுக்கு தனி இடஒதுக்கீடு: காங்கிரஸ், சிவசேனாக்கு பாஜக 'செக்'

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 04:51 pm

special-reservation-bill-passed-in-maharastra

 

மராட்டியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டமசோதா, மகாராஷ்டிர மாநில  சட்டப்பேரவையில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.இதன் மூலம் இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள காங்கிரஸ், சிவசேனாக்கு பா.ஜ.க அரசியல்ரீதியாக வாய்ப்பூட்டு போட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீதம் பேர் மராட்டியர்களாவர். அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி, இச்சமூகத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முந்தைய காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, மராட்டியர்களுக்கு 16 சதவீதமும், முஸ்லீம்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீட்டை கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மாநில அரசின் இடஒதுக்கீட்டு அறிவிப்புக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

இருப்பினும், தங்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யக்கோரி, மராட்டியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த 15ம் தேதி இதுதொடர்பாக அளித்த அறிக்கையின் அடிப்படையில், சமூக மற்றும் பொருளாதார பிரிவின்கீழ் மராட்டியர்களுக்கு 16 சதவீத தனி இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மசோதாவுக்கு மாநில பாஜக அரசு கடந்த 18 ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இந்த மசோதா மாநில சட்டப்பேரவையில் விரைவில் நிறைவேற்றப்படவும் உள்ளது. மராட்டியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டின் காரணமாக, மாநில அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திவரும் இடஒதுக்கீட்டு கொள்கையில் எவ்வித பாதிப்பும் இருக்காது என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீ்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம், இடஒதுக்கீடு கோரி போராடி வரும் மராட்டியர்களை பின்னணியில் இருந்து இயக்கிவரும் காங்கிரஸ், சிவசேனாக்கு அரசியல்ரீதியாக பாஜக வாய்ப்பூட்டு போட முடியும். எனினும் மராட்டியர்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நீதிமன்றம் தலையிடாமல் இருக்க வேண்டும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close