குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்தாலும் வியப்பதற்கில்லை: ஷாப்பிங் மால்களை சாடிய நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 05:23 pm
parking-fees-by-shopping-malls-challenged-gujarat-hc-asks

ஷாப்பிங் மால்கள், பெருவணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து்ள்ளது. மேலும், தங்கள் கடைகளுக்கு வரும் குழந்தைகள், முதியோர்களிடம் கூட இவர்கள்  நுழைவுக் கட்டணம் வசூலித்தாலும் வியப்பதற்கில்லை எனவும் நீதிமன்றம் சாடியுள்ளது.

வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பார்க்கிங் கட்டணம் தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிலா திரிவேதி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். அதில், "வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தேவைபட்டால் நாள் ஒன்றுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு முறையே ரூ.10, ரூ.30 கட்டணம் வசூலிக்கலாம். பார்க்கிங் என்ற பெயரில் வணிக நிறுவனங்களில் நடைபெற்றுவரும் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த, மாநில அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஒரு தனியார் வணிக நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ஏ.எஸ்.தேவ்,நீதிபதி பிரன் வைஷ்ணவ் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷாப்பிங் மால்கள், பெருவணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தங்கள் கடைகளுக்கு வரும் குழந்தைகள், முதியோர்களிடம்கூட இவர்கள் நுழைவுக் கட்டணம் வசூலித்தாலும் வியப்படைவதற்கில்லை எனவும் நீதிபதிகள் சாடினர். இந்த வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close