சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: சு.சுவாமி

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 10:37 am
sidhu-should-be-arrested-under-national-security-act-su-swamy

காலிஸ்தான் இயக்கத்தின் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. 

இந்த வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துவிட்டார். இந்த விழாவானது புதன் கிழமை கர்தார்பூர் நகரில் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியா சார்பாக மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, "காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close