அர்ஜென்டினாவில் ஒலித்த "ஓம் நமச்சிவாய' மந்திரம்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 11:19 am
yoga-connecting-india-argentina-pm-modi

அர்ஜென்டினாவின் புயினோஸ் ஏரீ்ஸ் நகரில் நாளை (சனிக்கிழமை) தொடங்கவுள்ள ஜி -20 நாடுகளின் 13 -ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு அங்கு சென்றடைந்தார்.

முதல் நிகழ்ச்சியாக "வாழும் கலைகள்' அமைப்பின் சார்பில் புயினோஸ் ஏரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அமைதிக்கு யோகா' எனும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் அவருடன் 600 பேர் கலந்துகொண்டு பல்வேறு யோகா பயிற்சி முறைகளை மேற்கொண்டனர்.

இதில் முக்கிய நிகழ்வாக "ஓம் நவச்சிவாய' மந்திரம் ஓதப்பட்டது. இந்திய பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சியும், அர்ஜென்டினாவின் பிரபல பாடகர் பட்ரீசியா சோசாவின் பாடலும் அரங்கேறின. நிகழ்ச்சியில் மோடி பேசும்போது, "யோக கலை உலக மக்களின் ஆரோக்கியம், வளம் மற்றும் அமைதிக்கு இந்தியா கொடுத்துள்ள கொடையாகும். நாம் அன்றாடம் யோகா மேற்கொள்வதன் மூலம் நம் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறுகின்றன. இன்று இங்கு நடத்தப்படும் யோகா நிகழ்ச்சி, இந்தியாவுக்கும், அர்ஜென்டினாவுக்கும் இடையே ஆன்மிக பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close