இந்தியாவுடன் நட்பு பாராட்ட மதச்சார்பற்ற நாடாக இருக்கணும் – பாகிஸ்தானுக்கு பிபின் ராவத் அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 02:26 pm
pakistan-to-be-a-secular-to-stay-friendly-with-india-army-chief

இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனில், பாகிஸ்தான் முதலில் மதச்சார்பற்ற நாடாக மாற வேண்டும் என்று இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

”இந்தியாவுடன் நாங்கள் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். பல போர்களுக்குப் பிறகும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அமைதியாக வாழ முடிகிறது என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தானால் அது ஏன் முடியாது?’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புனேவில் இன்று நடைபெற்ற ராணுவ பயிற்சி விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத், இம்ரான் கானுடைய பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அப்போது, “இருநாடுகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றால், பாகிஸ்தான் முதலில் உள்நாட்டு நிலவரங்களில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் தன்னைத் தானே இஸ்லாமிய நாடாக மாற்றிக் கொண்டது. அவர்கள் இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பினால், முதலில் மதச்சார்பற்ற நாடாக மாற வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இஸ்லாமிய நாடு என்று சொல்லிக் கொள்பவர்களுடன் நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்?’’ என்றார் அவர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close