சபரிமலையில் ரூ. 25 கோடி இழப்பு: தேவசம் போர்டு

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 05:31 pm

sabarimala-temple-income-falls-by-a-whopping-rs-25-crore

ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குறைந்ததால், தேவசம் போர்டுக்கு கிடைக்கும் வருமானமும் கணிசமாக குறைந்துள்ளது  என தகவல் வெளியாகியுள்ளது. 

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுபெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் உத்தரவிட்டதை, தொடர்ந்து கேரளா முழுவதும் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தியதால் போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர்.தொடர் போராட்டங்களால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக சபரிமலை பகுதியில் கேரள அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துவருகிறது. 

இதையடுத்து சபரிமலை பகுதியில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவுவதால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு வருகிற பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.இதனால் சபரிமலையில் கிடைத்துவந்த வருவாயும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மகரவிளக்கு மற்றும் கார்த்திகை சீசனில் சபரிமலைக்கு ரூ. 255 கோடி வருமானம் கிடைத்தது. அரவணா பாயசம் விற்பனை, அறை வாடகை, நெய் அபிஷேகம், பிரசாதம் விற்பனை, சந்நிதானத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை போடுவது போன்றவை சபரிமலை வருவாய் ஆகும். 

வழக்கமாக நவம்பர் முதல் ஜனவரி 15-ம் தேதி வரை மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை நடை திறக்கப்படும்போது நாள் ஒன்றுக்கு 50,000 முதல் 1,00,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். ஆனால் தற்போது 45,000 முதல் 50,000 வரை பக்தர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த ஆண்டுகளில் நடை திறக்கப்பட்டு 11 நாட்களை காட்டிலும் தற்போது உள்ள 11 நாட்களில் வருவாய் கணிசமாக ரூ 25 கோடி வரை சரிந்தது தெரியவந்துள்ளது. அரவணா விற்பனையில் ரூ.11.99 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. காணிக்கை ரூ.6.85 கோடி குறைந்துள்ளது. அப்பம் விற்பனை ரூ.2.45 கோடிக்கு இறங்கியுள்ளது. அறை வாடகை ரூ.50.62 லட்சமாகக் குறைந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.