அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்

  கிரிதரன்   | Last Modified : 30 Nov, 2018 06:29 pm
undertrial-prisoner-raped-in-bihar-hospital

பிகாரில் அரசு மருத்துவமனையில் பெண் விசாரணை கைதியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பாக இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிகார் மாநிலம், சீதாமாரி  மாவட்ட காவல் நிலையத்தில் பெண் ஒருவர் விசாரணை கைதியாக உள்ளார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு தன்னை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் முசாஃபர்பூர் நகருக்குட்பட்ட  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சைலேஷ் குமார், சோட்டிலால் குமார் ஆகியோரை தேடி வருவதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close