சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்த தடை

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 06:30 pm
centre-proposes-ban-on-all-animals-in-circuses

சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் வன விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதை தடுக்கக்கோரி விலங்குகள் நல அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதையடுத்து, ஏற்கெனவெ, சிங்கம், புலி ஆகியவற்றை சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தடை விதித்த மத்திய அரசு, தற்போது, யானை, குதிரை, நாய் உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சட்ட  மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய சட்டத்தின் மூலம் எந்த ஒரு நிகழ்ச்சிகள் அல்லது கண்காட்சி, சர்க்கஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இனி எந்த விலங்குகளையும் பயன்படுத்தப்படாது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close