தாய்ப்பால் கொடுப்பது வீட்டுவேலை! பெண்ணை அவமதித்த மால் நிர்வாகம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 07:03 pm
kolkata-mall-shamed-for-calling-breastfeeding-a-woman-s-chore-issues-unconditional-apology-to-mother

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது என்பது வீட்டு வேலை என பெண் ஒருவரை கொல்கத்தாவில் உள்ள மால் நிர்வாகம் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களை அவமதித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ‘சவுத் சிட்டி மால்’ வளாகத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தனி அறையும், பெண்களுக்கு கழிவறையும் ஏற்படுத்தி தரவேண்டும் என பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்குப் பதிலளித்த மால் நிர்வாகி, தாய்ப்பால் வழங்குவதற்கு தனி அறையெல்லாம் கொடுக்க முடியாது. ஷாப்பிங் மால் ஷாப்பிங் செய்வதற்கு மட்டும்தான். அதைவிட்டுவிட்டு வீட்டு வேலைகளையெல்லாம் செய்வதற்கு இடமில்லை. அதையெல்லாம் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் சமூக வலைதளங்களில் மால் நிர்வாகியின் செயலை பதிவிட்டதால், பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். இதையடுத்து மால் நிர்வாகம் அப்பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் சவுத் சிட்டி மாலில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close