ராகுல் காந்தி சொன்னதால் பாகிஸ்தான் சென்றேன்: சித்து

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 06:53 am

rahul-gandhi-asked-me-to-go-sidhu

பஞ்சாப் அமைச்சர் சித்து, அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் பேச்சை கேட்காமல் பாகிஸ்தானுக்கு ஏன் சென்றார் என கேட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலேயே சென்றதாக கூறியுள்ளார்.

சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராக்களுக்கு சென்று வழிபட கர்தார்பூரில் இந்திய பாகிஸ்தான் அரசுகள் சேர்ந்து அமைத்த சாலை திறப்பு விழாவிற்கு பஞ்சாப் அமைச்சர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து சென்றிருந்தார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுடன் சித்து நெருங்கிய உறவை கடைபிடித்து வருவதால், அவரது இந்த பயணம் பல கேள்விகளை எழுப்பியது. முன்னதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், இந்த விழாவில் கலந்துகொள்ள மறுத்திருந்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சித்துவிடம், "ஏன் உங்களின் கேப்டன் பேச்சை நீங்கள் கேட்கவில்லை?" என வினவப்பட்டது. அதற்கு அவர், "யாரை சொல்கிறீர்கள். முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்கையா? அவர் எனது ராணுவ கேப்டன். என்னுடைய கேப்டன் ராகுல் காந்தி தான். அவர் சொன்னதால் தான் சென்றேன். கேப்டன் அனுப்பும் இடங்களுக்கு செல்வேன். அவர் எனது கேப்டனின் கேப்டனும் கூட" என்றார்.

சித்து பாகிஸ்தானுக்கு சென்றது அம்ரிந்தர் சிங்குக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அது குறித்து பேசிய சித்து, "அம்ரிந்தர் சிங் எனது முதல்வர். எனது பாஸ். எனக்கு தந்தை ஸ்தானத்தில் உள்ளவர். அவரிடம் சொல்லாமல் நான் செய்யும் முதல் காரியம் இது கிடையாது. முன்னர் பாகிஸ்தானுக்கு சென்ற போது, மக்களுக்காக வருவேன் என கூறியிருந்தேன். அதன்படி சென்றேன்" என்றும் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close