ஜி20 மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 07:34 am

modi-meets-us-china-jappan-presidents-at-g-20

அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் ஷின்சோ அபே உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார். 

ஜி-20 அமைப்பில், உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம் பெற்றுள்ளன.
 
ஜி-20 சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி க்கு, அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனிடையே, அர்ஜென்டினாவில் நேற்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close