வாராக்கடன் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 08:54 am
congress-is-responsible-for-issues-with-bad-debt-amit-shah

வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

ராஜஸ்தானில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குசாமன் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அமித் ஷா, "முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் அளித்த கடன்கள் தான், தற்போது, வாராக் கடன்களாக மாறி உள்ளன. இந்த கடன்கள, பிரதமர் மோடி அரசால் அளிக்கப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சியின் தவறான செயல்களின் விளைவுகளே, இந்த வாராக் கடன்கள். நீரவ் மோடி, மல்லையாவுக்கும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது தான் கடன் வழங்கப்பட்டது. பயம் இல்லாமல் இருந்த அவர்கள், மோடி ஆட்சிக்கு வந்தபின், சிறைக்கு செல்ல பயந்தே வெளிநாடு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் பாக்கி வைத்துள்ள ஒவ்வொரு ரூபாயையும் இந்தியாவுக்கு கொண்டு வரவே பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்படுகிறது" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close