ரயில் டிக்கெட் 'வெயிட்டிங் லிஸ்ட்'ல இருக்கா? இனி உடனே 'சீட்' - ரயில்வே அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 12:14 pm
indian-railways-has-good-news-for-waiting-list-passengers-chances-of-tickets-getting-confirmed-to-rise-with-new-rule

ரயில் புறப்படுவதற்கு  முன்பு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளின் விபரங்களை உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு அனுப்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உடனடிடாக கிடைக்கும்படியான ஒரு புதிய வழிமுறையை ரயில்வே கொண்டுவர உள்ளது.

ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து, அது காத்திருப்போர் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட்) இருந்தால் அவர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாது. அதே நேரத்தில் ரயில்வே நிலையத்திற்கு நேரடியாக சென்று டிக்கெட் பெறுபவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட் இடங்கள் அவர்களுக்கு ஒத்துக்கொடுக்கப்படும். 

ஆனால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் இந்த டிக்கெட் குறித்த விபரங்கள் டிக்கெட் பரிசோதகருக்கு தெரியாது. அவர் குறிப்பிட்ட இடத்தில் அந்த நபர் வரவில்லை என்று தெரிந்த பிறகே அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவருக்கு அந்த இடத்தை ஒதுக்கிக்கொடுப்பார். அந்த இடம் வரும் வரை அவர்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். 

அதுவரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர், டிக்கெட் பரிசோதகர் எப்போது இடம் கொடுப்பார் என காத்திருக்க வேண்டும். இனி இந்த நிலைமை இல்லை. ஆம், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட் குறித்த விபரங்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்படும். உடனே அவர் அந்த இடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ளோருக்கு ஒதுக்கி கொடுக்கலாம். இதனால் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு அனுப்பி காத்திருப்போர் பட்டியலில் காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது. 

வருகிற ஜனவரி மாதம் முதல் இந்த முறை அமல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் சில தடங்களில் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. எனவே இதனை அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக இதற்காக 500 கருவிகள் வாங்கப்பட்டு டிக்கட் பரிசோதகர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. விரைவில் இரண்டாம் கட்டமாக அனைத்து ரெயில் டிக்கட் பரிசோதகர்களுக்கும் இந்த கருவிகள் அளிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close