வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு :பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 01:29 pm
mp-congress-and-bsp-protesters-claims-evm-tampering-in-satna

மத்திய பிரதேச மாநிலம், சத்னாவில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய  ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்னா பகுதியில் உள்ள ஒரு மையத்தின் முன் இன்று (சனிக்கிழமை) திரண்ட காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள், இம்மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்,  முறைகேடு செய்ய, மாநில ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைவது போன்று, சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சியை ஆதரமாக கொண்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மாவட்ட நிர்வாகம், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close