நிலம் மோசடி வழக்கு: சோனியா காந்தியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 01:33 pm
sonia-gandhi-s-son-in-law-robert-vadra-summoned-by-enforcement-directorate-in-land-deal-case

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை‌ சம்மன் அனுப்பியுள்ளது.

சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கடந்த 2015ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் சுமார் 375 ஹெக்டர் நிலத்தை சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் மூலம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  அதில் ஒரு வாரத்திற்குள் அவர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் இந்த விவகாரம் தலை தூக்கியதை அடுத்து, இது சோனியா தரப்பிற்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close