சரக்கு -சேவை வரி மூலம் (ஜிஎஸ்டி) மத்திய, மாநில அரசுகளுக்கு நவம்பர் மாதம் மொத்தம் 97,637 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.16,812 கோடி, மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.23.070 கோடி, இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி உள்ளிட்ட ஐஜிஎஸ்டி ரூ.49,726 கோடி செஸ் வரி ரூ.8,031 ஆகிய வரி இனங்கள் அடங்கும்.
வழக்கம்போல், ஐஜிஎஸ்டி வரி வருவாயிலிருந்து சிஜிஎஸ்டிக்கு 18,262 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டிக்கு 15,704 கோடி ரூபாயும் மாநிவங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 35,073 கோடி ரூபாயாகவும், மாநில அரசுகளின் மொத்த வரி வருவாய் 38,774 கோடி ரூபாயாகவும் உள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.