நேஷனல் ஹெரால்டு வழக்கு: முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா மீது குற்றப்பத்திரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 08:58 pm
national-herald-case-chargesheet-filed-against-fmr-cm-bhupinder-singh-hooda

நேஷனல் ஹெரால்ட்டு வழக்கில் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா, மற்றும் அசோசியேட்டட் ஜர்ன்ல்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் மேல், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு நிலம் குத்தகைக்கு விடப்பட்ட விவகாரத்தில், மோசடி, ஊழல், கிரிமினல் கூட்டு சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நேஷனல் ஹெரல்ட்டு என தற்போது அழைக்கப்படும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டட் நிறுவனத்துக்கு பஞ்ச்குலாவில் உள்ள 3500 சதுர மீட்டர் கொண்ட நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இதில், அம்மாநில முதல்வரும் ஹரியானா நகர வளர்ச்சித் துறை தலைவருமான ஹூடா பெரும் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு, ஹரியானா மாநில விஜிலென்ஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு கையில் எடுத்த சிபிஐ, தற்போது, ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, மற்றும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close