அசாம் ரயிலில் வெடிவிபத்து; 11 பேர் காயம்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:03 am
assam-intercity-train-blast-11-injured

அசாம் மாநிலத்தின் உடல்குரி மாவட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு இன்டர்சிட்டி ரயிலில் இன்று மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அசாமின் கமக்கியா - டெகர்கோன் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி ரயில், ஹரிசிங்கா ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு ரயில் பெட்டியில் வெடிவிபத்து ஏற்பட்டது. மாலை 7 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாகவும், உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இது குண்டு வெடிப்பா அல்லது, மின்சார ஷார்ட் சர்கியூட்டால் ஏற்பட்ட விபத்தா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை" என வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் படுகாயம் அடைந்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close