75வது சுதந்திர ஆண்டையொட்டி 2020ல் இந்தியாவில் ஜி20- பிரதமர் மோடி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 08:36 am
india-looks-forward-to-welcoming-the-world-to-the-g-20-summit-modi

இந்தியா தனது 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில், வரும் 2022ம் ஆண்டு நடைபெறும் ஜி-20 நாடுகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டீனா தலைநகரான பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற, ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் இரு நாள் மாநாட்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்பட உலகின் 20 பொருளாதார வல்லரசு நாடுகள் பங்கேற்றன.

பொருளாதார சவால்கள் தொடர்பாக நடந்த இம்மாநாட்டில், பங்கேற்ற பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐநா செயலர் அன்டோனியோ குதரெஸ் உள்ளிட்டோரை சந்தித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்தார்.

பின்னர் பிரதான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொருளாதார குற்றம் இழைத்து வேறு நாடுகளுக்கு தப்பியோடுவோரை கையாள்வது தொடர்பான 9 அம்ச திட்டங்களை சமர்ப்பித்தார்.

 

 

தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியில் உயைாற்றிய பிரதமர் மோடி, வரும் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள ஆண்டில் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது என மோடி குறிப்பிட்டுள்ளார். 2022ம் ஆண்டு இந்த மாநாடு இத்தாலியில் நடைபெற இருந்த நிலையில் இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக இத்தாலி நாட்டிற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

உலகத்தலைவர்களே இந்தியாவிற்கு வாருங்கள் என மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு நிறைவடைந்தது.

மேலும் இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close