உலகில் 2018ல் நடந்த மிக பெரிய அழிவு: கேரள வெள்ளம் முதலிடம்

  Newstm News Desk   | Last Modified : 02 Dec, 2018 09:12 am

kerala-floods-led-to-most-casualties-among-extreme-global-events-in-2018-climate-report

இந்த ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடர்கள் பட்டியலில் கேரள வெள்ளம் முதல் இடத்தில் உள்ளது. 

2018ம் ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடராக கேரள வெள்ளத்தை சர்வதேச வானிலை மையம் அறிவித்துள்ளது. 1920ம் ஆண்டுக்குப் பிறகு  கேரளாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் காரணமாக 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 

இதற்கடுத்தபடியாக அதிக உயிர்பலியை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களாக ஜப்பான், கொரியா, நைஜீரியா நாடுகளில் ஏற்பட்ட வெள்ளமும், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட கொடூர வெயிலும் இடம்பெற்றுள்ளன.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் உலக அளவில் 4வது இடத்தில் கேரள வெள்ளம் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநிலமெங்கும் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பாக கருதப்பட்டது.

குறிப்பாக, வெள்ளத்தால் 14 மாவட்டங்களில் 54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 443 பேர் பலியானதாகவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சர்வதேச வானிலை மையத்தின் அறிக்கையில், தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் 2018 மிகவும் வெப்பமானதாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜப்பான், கொரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டத்து. அதே போல், பாகிஸ்தானில் இந்த வருடம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது.

உலக அளவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பொருளாதார அளவில் பெருத்த இழப்பினை சந்தித்த முதல் இடமாக அமெரிக்காவின் ஃப்ளோரண்ஸ் மாகாணமும், நான்காவது இடமாக கேரளாவும் அறிவிக்கப்பட்டது.

சராசரியாக 53 புயல்கள் மட்டுமே ஒவ்வொரு வருடமும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் மட்டும் சுமார் 70 புயல்கள் உருவாகியுள்ளன. அவை அனைத்தும் வடக்கு ஹெமிஸ்பியரில் ஏற்பட்டதன் விளைவாக 2018ம் ஆண்டில் அனேக ஐரோப்பிய நாடுகள் கடுமையான வறட்சியை சந்தித்தன.

இந்த வருடம் மட்டும் 17.7 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் மழை மற்றும் இதர கால நிலை மாற்றங்களால் 2.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

தொடர்புடைய செய்திகள் :
  உங்கள் கருத்துக்களை பகிரவும்
Advertisement:
[X] Close