நீதித்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது: நீதிபதி குரியன் ஜோசப்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 10:24 am
i-ll-never-really-agree-that-there-s-corruption-in-higher-judiciary-sc-judge-kurian-joseph

நீதித்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் இணைந்து செய்தியர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன. குற்றச்சாட்டு கூறிய நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். இவர் கடந்த நவம்பர் 30ம் தேதி ஓய்வு பெற்றார். 

ஓய்வுபெற்ற பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப், "தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருந்த போது நீதிமன்றம் சரியான பாதையில் செல்லவில்லை. மாறாக அனைத்தும் முரணாகவே நடைபெற்றது. அவரிடம் இது பற்றி எடுத்துரைத்தும் அவர் கேட்கவில்லை.அதனால் வேறு வழியின்றி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

தீபக் மிஸ்ரா ஓய்விற்கு பிறகு தற்போது உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாக நான் கருதுகிறேன். முழுவதுமாக மாற சில நாட்கள் ஆகும். அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதித்துறையில் ஊழல் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒருவேளை கீழமை நீதிமன்றங்களில் அவ்வாறு நடந்து இருந்தால் அதற்கு அந்தந்த மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close