தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா - நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போகிறவர்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 11:14 am
new-chief-election-commissioner-to-take-charge-today

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றார். அடுத்த ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, சுனில் அரோரா அப்பதவிக்கு வந்துள்ளார்.

தற்போது 62 வயதாகும் அவர், மத்திய திறன் மேம்பாடு மற்றும் நிறுவனங்கள் துறை மற்றும் ஒளிபரப்புத்துறை ஆகியவற்றில் செயலாளராக பணியாற்றியவர் ஆவார். நிதித்துறை, ஜவுளித்துறை, திட்டக்கமிஷன் போன்றவற்றிலும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த 1980ம் ஆண்டின் ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சுனில் அரோரா, தேர்தல் ஆணையத்தில் மிக மூத்த அதிகாரி என்ற நிலையில் தலைமைப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரியின் பதவிக் காலம் என்பது அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரையில் என்ற விதியின்படி, சுனில் அரோரா இன்னும் 3 ஆண்டுகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார்.

இவரது தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அடுத்த ஆண்டில் ஜம்மு-காஷ்மீர், ஒடிஸா, மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close