மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ள முதல்வர் மகனின் சொத்து மதிப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 12:58 pm
telangana-cm-s-son-asset-increased-by-424-congress

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவின் சொத்து மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 424 சதவீதம் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மது யாசிக் கவுடு ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
கடந்த 2014 -இல், கே.டி.ராமா ராவ் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.7.9 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அதுவே தற்போது ரூ.41.82 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது நான்கே ஆண்டுகளில் மாநில முதல்வர் மகனின் சொத்து மதிப்பு 424 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாநில அமைச்சரான ராமா ராவ், கடந்த 2016-இல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு அரசு முறைப் பயணங்கள் மேற்கொண்டபோது, தன்னுடன் அரசு உயரதிகாரிகளை மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய தொழிலதிபரும், சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜூவின் மகனுமான தேஜா ராஜுவையும் தன்னுடன் அழைத்து சென்றார் என கவுடு தெரிவித்தார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸின் இக்குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close